×

கஸ்டமருக்கு மீண்டும் சலுகை; பிரீபெய்ட் சிம் கார்டுகளுக்கான வேலிடிட்டி மே.3 வரை நீட்டிப்பு....ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் அறிவிப்பு

சென்னை: செல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டித்து ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,835 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 452 பேர் உயிரிழந்த நிலையில், 1,766 பேர் குணமடைந்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில  அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபடியாக, கடந்த 24-ம் தேதி நேற்று இரவு 8 மணிக்கு நாட்டுக்கு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 24-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும்  முழுமையான ஊரடங்கு அமல்படுத்தவதாக அறிவித்தார்.

ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டில் முடங்கியுள்ளதால், மக்களுக்கு பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளது. தொலைத் தொடர்பு சேவை வழங்கி வரும் பொதுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவை ப்ரீபெய்டு  செல்லிடப்பேசி சேவையை வரும் ஏப்ரல் 20-ம் தேதி வரை நீட்டிப்பதாகத் தெரிவித்தது. ஏர்டெல் தொலைத் தொடார்பு நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகை வழங்கியுள்ளது. ஏப்ரல் 17ம் தேதி வரை வாடிக்கையாளர்களுக்கு  இன்கமிங் வசதி இலவசம் என்றும் ரூ.10 டாக் டைம் வழங்கப்படும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது.

இருப்பினும், கொரோனா தாக்கம் குறையாத காரணத்தினால், மேலும், ஊரடங்கை நீட்டிக்க பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், மத்திய அரசு அறிவிப்பிற்கு முன்பாகவே சில மாநில அரசுகள் ஊரடங்கை  தங்கள் மாநிலத்தில் நீட்டித்து உத்தரவிட்டனர். தொடர்ந்து, கடந்த 14-ம் தேதி நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஊரடங்கு  உத்தரவை மே-3-ம் தேதி வரை நீட்டித்து உத்தவிட்டார்.

இந்நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், தொலைத் தொடார்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை  காரணமாக வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பிரீபெய்ட் சிம் கார்டுகளுக்கான வேலிடிட்டி காலம் செல்போன் நிறுவனங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் மே 3 ஆம் தேதி வரை 12 கோடி  வாடிக்கையாளர்களுக்கு வேலிடிட்டி காலத்தை நீட்டித்துள்ளன. ஏற்கெனவே ஏப்ரல் 17-ம் தேதிவரை நீட்டித்த நிலையில் ரீசார்ஜ் செய்வதற்கு போதிய வசதி இல்லை என்பதால் வேலிடிட்டி காலத்தை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Customer ,Airtel ,Vodafone , Offer back to Customer; Airtel, Vodafone announces extension of validity for prepaid SIM cards
× RELATED நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும்...