×

கடவுள் இருக்கான் குமாரு...மனைவியை பார்க்கும் ஆசையில் தாய் இறந்ததாக புளுகிய மகன்: கர்நாடகா சென்று வசமாக சிக்கிய சுவாரசியம்

சென்னை, கோடம்பாக்கத்தை சேர்ந்தவர்  முத்து வீரன். இவருக்கும் குடகு மாவட்டம் வால்னூரு தேகட்டூர் கிராமத்தை  சேர்ந்த பெண்ணுக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.    சில தினங்களுக்கு முன் முத்துவீரன் மனைவியை மாமியார் வீட்டில் விட்டு  விட்டு சென்னைக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. நாட்கள் கடந்த நிலையில்  மனைவியை பார்க்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டுள்ளது. அதற்கு ஊரடங்கு உத்தரவு  அவருக்கு தடையாக இருந்துள்ளது. இதனால் செய்வதறியாது தவித்த அவர், சென்னை மாநகராட்சிக்கு சென்று தன்னுடைய தாயார் இறந்து விட்டதாகவும்,  அதற்காக பைக்கில் கர்நாடகா மாநிலம் சித்தாபுராவுக்கு செல்ல வேண்டும் என்று  அனுமதி கோரியுள்ளார். இதையடுத்து, மாநகராட்சி சார்பில் அவருக்கு அனுமதியும்  வழங்கப்பட்டது. உடனே பைக்கில் கர்நாடகாவுக்கு சென்றார்.

அங்கு மனைவி  மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் வசித்து வந்தார். இதை அறிந்த அருகில்  இருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து வந்து இங்கு  வசித்து வருகிறார். கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தில் போலீசார்  மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, முத்து வீரன் வீட்டிற்கு சென்று சென்னை மாநகராட்சி வழங்கிய அனுமதி சீட்டை  வாங்கி அதிகாரிகள் விசாரித்தனர். அதில், உண்மைக்கு புறம்பாக தன்னுடைய தாய் இறந்து  விட்டதாக கூறி கர்நாடகாவுக்கு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது  வழக்கு பதிவு செய்த மடிக்கேரி ரூரல் போலீசார் அவரை மாவட்ட மருத்துவமனையில்  14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஏமாந்த சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியில் கர்நாடகாவுக்கு செல்ல அனுமதி சீட்டு கேட்ட முத்து வீரன், தனது தாய் உடல்நிலை குன்றி இறந்து விட்டதாக கூறியுள்ளார். அதை பற்றி விசாரித்து கூட பார்க்காமல், மாநகராட்சி அதிகாரிகள் இரக்கப்பட்டு உடனடியாக பயண அனுமதி சீட்டு வழங்கி இருக்கின்றனர். உண்மையில், முத்து வீரனின் தாயார் இறந்து மூன்று வருடங்கள்  ஆகிறதாம்.


Tags : Kumaru ,God ,Karnataka ,acaiyiltay wife ,Sikh , Corona, Chennai, Kodambakkam, Corona, Pearl Champion
× RELATED தண்ணீர்… தண்ணீர்…