×

சட்டங்களால் கட்டுப்படுத்த முடியாததை கொரோனா சாதித்தது ஆண்டுக்காண்டு அதிகரித்து வந்த கள்ளக்காதல் கொலைகள் குறைந்தன: காலம்காலமாக ஆட்டம்போட்டவர்களை அடக்கியது

சென்னை: கொ ரோனா தொற்று பரவி விடுவோ என்ற பயத்தில் கள்ளக்காதல் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. பெண்களை தொட்டு பேசவே பயப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகத்தையே கொரொனா வைரஸ் உலுக்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகளே திணறி வருகின்றன. அப்படியிருக்கும்போது, மற்ற நாடுகளை பற்றி சொல்லவா வேண்டும். அவர்கள் படும்பாடு சொல்லிமாளாது. இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 450க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,267ஐ கடந்தது. பலி எண்ணிக்கை 15 ஆனது.

ஒவ்வொரு நாளும் பாதிப்பு, பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒவ்வொருவரையும் அதிர்ச்சியடைய செய்து வருகிறது. சொல்லப்போனால் கொரோனா வைரஸ் ஒவ்ெவாருவருக்கும் மரண பயத்தை காட்டியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல், கொரோனா வைரஸ் ஒவ்வொருவருக்கும் புதுபுது பாடத்தை கற்று கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை உடன் பிறந்தவர்கள், உறவினர்களே ஒதுக்கி விடுவது, மரணம் அடைந்தால் சடலத்தை கூட உறவினர்கள் வாங்க மாட்டேன் என்று சொல்வது, புதைப்பதற்கோ, எரிப்பதற்கோ சொந்த ஊரிலே இடம் கொடுக்க மறுப்பது என்று கண்முன்னே மக்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறது.

அதே நேரத்தில் தூய்மை ஒழுக்கத்தையும் கொரோனா வைரஸ் தொற்று கற்றுக்கொடுத்துள்ளது. எப்படி என்றால் கொடிக்கட்டி பறந்து வந்த பாலியல் தொழிலையே முடக்கி விட்டுள்ளது. ஒரு காலத்தில் இதுபோன்ற பாலியல் தொழில் நடைபெறும் இடம் டாஸ்மாக் மதுக்கடையில் கூடியிக்கும் கூட்டத்தை போல களைக்கட்டி மக்கள் கூட்டம் காணப்படும். கொரோனாவால் இதுபோன்ற இடங்களை எட்டிப்பார்க்கவே ஒவ்வொருவரும் பயந்து வருகின்றனர். அதுமட்டுமல்ல, அந்த இடங்களுக்கு செல்லும் அனைத்து பாதைகளையும் கொரோனா வைரஸ் பரவும் என்ற காரணத்தால் அரசு அடைத்து விட்டது.

பெரும்பாலும் கள்ளக்காதல் என்பது வெளியில் பார்த்து பழகும் போதும், பேசும் போதும்தான் நடந்து வந்தது. மேலும் வீட்டில் கணவன், மனைவி மற்றும் யாரும் இல்லாத நேரத்தில் நடந்து வந்தது. தற்போது ஊரடங்கால் வெளியில் செல்லவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வெளியில் பார்த்து பேசுவது என்பது அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. வீட்டில் அனைவரும் இருந்து வருகின்றனர். எனவே, எந்த காரணத்தை சொல்லியும் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தனிமையில் சந்தித்து பேசக்கூடிய கடற்கரை, ஓட்டல்கள் உள்பட அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால், அந்த பாதையும் கள்ளக்காதலுக்கு தடையாகி விட்டது.

மேலும், எங்கே தகாத உறவில் ஈடுபட்டால் கொரோனா வைரஸ் தொற்று பரவி விடுமோ என்ற பயமும் ஒவ்வொருவரிடமும் வரத்தொடங்கியுள்ளது. கையை தொட்டாலோ, முத்தம் கொடுத்தாலோ இந்த நோய் பரவி விடுமோ என்ற பயமும் ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறது. தகாத உறவில் ஈடுபடுவோர் ஆண்களையோ, பெண்களையோ தொடுவதற்கு கூட அச்சப்படும் சூழ்நிலை நிலை ஏற்பட்டுள்ளது. நெருங்கி பழகினாலும் நோய் தாக்கி விடுமோ என்ற பயமும் ஆட்கொண்டுள்ளது. இதனால், யார் சொல்லியும் தவறான பழக்கத்தை விடாதவர்கள் கூட தற்போது மாற தொடங்கியுள்ளனர். ஆண்கள் தங்களது மனைவியையும், பெண்கள் தங்களது கணவனையும் மட்டுமே நினைக்க தொடங்கியுள்ளனர்.

எத்தனையோ கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டும் இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. காலம் காலமாக இப்படிப்பட்ட செயல்களில் பலர் ஆட்டம் போட்டு வந்தனர். தற்போது, கொரோனா வைரஸ் அவர்களை அடக்கி வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதனால், கள்ளக்காதல் குற்றங்கள் வெகுவாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. கள்ளக்காதல் காரணமாக தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1459 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. சென்னையில் மட்டும் 158 கொலைகள் நடந்துள்ளது. கள்ளக்காதல் காரணமாக கடத்தல், மிரட்டல், தாக்குதல் உட்பட 213 குற்றங்கள் நடந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தற்போது கொரோனா பாதித்த நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Corona ,counterfeit killings ,killings ,attampottavarkalai , Corona, counterfeiting, murders
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...