×

கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரையும் முதல்வர் கலந்தாலோசிக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்றை தடுப்பதற்கு தமிழ்நாட்டில் செய்யப்படும் பரிசோதனைகளின்  எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே உள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மூலமாக மட்டுமே  கொரோனா தொற்றைத் துல்லியமாக உறுதிப்படுத்த முடியும். இதுதான் கொரோனா தொற்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கான  ஒரேவழியாகும். இந்த வழியை இதுவரை தமிழக அரசு கடைபிடித்ததாக தெரியவில்லை.தற்போது, மருத்துவர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும், துப்புரவு தொழிலாளர்களுக்கும் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை.

போதிய தடுப்பு மற்றும் சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகள் இல்லாமலேயே நோய் குறைந்து விட்டது என்று பொய்யான ஒரு சித்தரிப்பை ஏற்படுத்துவது தமிழக மக்களை மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுபோய் தள்ளிவிடும்.  எனவே, முதலமைச்சர், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும்  கலந்தாலோசித்து தமிழக மக்களை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றுவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : parties ,CM ,Thirumavalavan , Corona, CM, Thirumavalavan
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...