×

சர்வதேச ஃபிஸ்ட்பால் போட்டி தள்ளி வைப்பு

சென்னை: ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளில் நடைபெற இருந்த சர்வதேச அளவிலான ஃபிஸ்ட்பால் போட்டிகள் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. சில போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. இந்த ஆண்டு ஜூலை 2-4 தேதிகளில் இத்தாலியில்  நடைபெற இருந்த ஆண்களுக்கான, யூரோ ஃபிஸ்ட்பால் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 24-26 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் ஜெர்மனியில் நடைபெற உள்ள ஐரோப்பிய இளையோர் கோப்பை, பிரேசிலில் நடைபெற இருந்த பான் அமெரிக்கன் சாம்பியன்ஷிப், நவம்பர் மாதம் சீனாவில் நடைபெற இருந்த யு-16 சாம்பியன்ஷிப், உலக பெண்கள் சாம்பியன்ஷிப் ஆகியவை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் 2021 ஜனவரியில் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற இருந்த சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 2021 ஜூலையில் நடைபெற இருந்த ஃபிஸ்ட்பால் உலக கோப்பை போட்டி  2022ம் ஆண்டு ஜூலைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ‘தமிழகம் மற்றும் இந்திய அளவில் இந்த ஆண்டு நடத்த திட்டமிட்டிருந்த ஃபிஸ்ட்பால் போட்டிகளும் மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது’ என்று தமிழ்நாடு ஃபிஸ்ட்பால் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாலவிநாயகம் தெரிவித்தார்.

Tags : fistball competition , International Fistball Contest, Corona, Postponement
× RELATED தேசிய ஃபிஸ்ட்பால் போட்டி தமிழகம் சாம்பியன்