×

தளர்த்தினால் பல உயிர்களை இழக்க வேண்டும்; இங்கிலாந்தில் ஊரடங்கு 3 வாரம் நீட்டிப்பு: பிரதமருக்கு பதிலாக வெளியுறவு செயலர் அறிவிப்பு

லண்டன்: ஊரடங்கை தளர்த்தினால் பல உயிர்களை இழக்க வேண்டிவரும் என்பதால், இங்கிலாந்தில் ஊரடங்கு 3 வாரம் நீட்டிக்கப்படுகிறது என்று, அந்நாட்டு பிரதமருக்கு பதிலாக வெளியுறவு செயலாளர் அறிவிப்பை வெளியிட்டார். கொரோனா வைரஸ் பாதிப்பால் இங்கிலாந்தில் இதுவரை 1,03,093 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,729 பேர் கொரோனா வைரஸ் காரணமாக இறந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கொரோனா வைரசின் தீவிர அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இங்கிலாந்தில் ஊரடங்கு மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு ஓய்வு எடுத்துவரும் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக இங்கிலாந்தின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கூறியதாவது: இப்போதைக்கு ஊரடங்கை தளர்த்த முடியாது. இதுவரை விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் நடைமுறைக்கு வரும். சமூக பரவல் ஆபத்தான நிலையை எட்டவில்லை. ஆனால் மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் தொற்றுநோய் பரப்பியுள்ளது. ஊரடங்கு காரணமாக பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தொற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தாத அளவுக்கு வந்த பின்னர்தான், ஊரடங்கு நேரத்தை தளர்த்த முடியும்.

பெரிய அளவிலான பரிசோதனைகள் நடத்தப்படும். தற்போது தொற்று விகிதம் எதிர்பார்த்தபடி குறையவில்லை. மற்ற நாடுகளில், மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் வைரஸ் பரவியிருப்பதைக் காண முடிந்தது.
சமூக இடைவெளியை தளர்த்துவது வைரஸ் பரவும் அபாயத்தை அதிகரிக்கும் என்று எங்களுக்கு மிக தெளிவான ஆலோசனைகள் கிடைத்துள்ளது. தளர்த்தினால், இரண்டாவது அலையை ஏற்படுத்தி, வைரஸ் பரவலை ஏற்படுத்தக்கூடும். இதன் விளைவாக அதிகமான உயிர்கள் கொல்லப்படலாம். இதுவரை அடைந்த வெற்றி வீணாகிவிடும்.

ஊரடங்கை தளர்த்தினால் பொது சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டையும் ஆபத்தில் ஆழ்த்தும். இதை மனதில் வைத்து, ஊரடங்கு இன்னும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், வைரஸ் பரவாமல் தடுக்கவும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Loosening ,Foreign Secretary ,announcement ,UK , UK, Curfew Extension, Foreign Secretary
× RELATED ஈடி, ஐடி, சிபிஐயை பயன்படுத்தி...