×

சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மட்டும் நடைபெறும்: கொடியேற்றம், தேரோட்டம், திருவீதியுலா நடைபெறாது என அறிவிப்பு

மதுரை: சித்திரை திருவிழாவில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மட்டும் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மே 4-ம் தேதி காலை 9.05 முதல் 9.23 மணிக்குள் திருக்கல்யாணம் நடத்தப்படும். உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி 4 சிவாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பர். சித்திரை திருவிழாவின் போது கொடியேற்றம், தேரோட்டம், திருவீதியுலா ஆகியவை நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் இந்த சித்திரை திருவிழா என்பது உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக மீனாட்சி திருக்கல்யாணம் அதனை தொடர்ந்து வருகின்ற வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகின்ற காட்சி உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. லட்சக்கணக்கான மக்கள் இந்த நிகழ்ச்சியை கண்டுகளிப்பார்கள்.

இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் மே 7ஆம் தேதி கள்ளழகர் வைகையில் இறங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 24ஆம் தேதி தொடங்கிய ஊரடங்கு, தற்போது மே 3ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பங்குனி மாதம் மாரியம்மன் கோவில்களில் திருவிழாக்கள் ரத்துசெய்யப்பட்டன. இந்நிலையில் சித்திரை திருவிழா தொடர்பாக மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர்,  அர்ச்சகர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் மீனாட்சி கோவிலில் திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் மே 4 ல் சேத்தி மண்டபத்தில் நடைபெறும்.  

4 சிவாச்சாரியார்கள் மட்டுமே உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி திருக்கல்யாண நிகழ்வை நடத்தி வைப்பர். WWW.maduraimeenakshi.org என்ற இணையதளத்தில் திருக்கல்யாண நிகழ்வு ஒளிபரப்பு செய்யப்படும். திருமணமான பெண்கள் தங்கள் வீட்டிலேயே பிரார்த்தனை செய்து புதிதாக மங்கல நாண் அணியும் மரபை பின்பற்றலாம்.  மே 4 ஆம் தேதி காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் புதிய மங்கல நாண் மாற்றிக்கொள்ள உகந்த நேரம்” என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சித்திரை திருவிழாவின் போது கொடியேற்றம், தேரோட்டம், திருவீதியுலா ஆகியவை நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Meenakshi Amman Thirikkalum ,festival ,film festival ,Meenakshi Amman Tirukkalram , Chithirai Festival, Meenakshi Amman, Thirukkurali
× RELATED மதுரை மீனாட்சியம்மன் கோயில்...