×

நாளுக்கு நாள் இரட்டிப்பாகும் கொரோனா பாதிப்பு: இந்தியாவில் இதுவரை 13,835 பேருக்கு பாதிப்பு....பலி எண்ணிக்கை 452-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,835-ஆக அதிகரித்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 452-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,767 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 835 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 13 ஆயிரத்து 835 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,766 ஆக உள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1076 பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

Tags : India , Corona, India, Killed
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...