×

ஊரடங்கு கெடுபிடிகளுக்கிடையே கொரோனாவுக்கு படைக்கப்பட்ட கிடா விருந்து : 'பேஸ்புக்'வீடியோவால் சிக்கிய இளைஞர்கள்!

தஞ்சை : கும்பகோணத்தில் ஊரடங்கை மீறி கிடா விருந்து சாப்பிட்ட 50 பேரில் பேஸ்புக்கில் லைவ் செய்த இளைஞரை போலீசார் கைது செய்த நிலையில் மீதமுள்ளவர்களை தேடி வருகின்றனர்..இந்தியா முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காரணமாக மே 3ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனால் அதனையும் மீறி தேவையின்றி ஊர் சுற்றி வருபவர்களை போலீசார் மடக்கி பிடித்து வாகனங்கள் பறிமுதல், அபராதம், வழக்குப்பதிவு, கைது என சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் சிலர் காட்டுப்பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஓன்று கூடி விளையாடுவதை போலீசார் ட்ரோன் மூலம் விரட்டி கண்காணித்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.. இந்த நிலையில்  தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணம் பகுதியிலுள்ள தியாகசமுத்திரம் என்ற கிராமத்தில் இளைஞர்கள் சிலர் ஊரடங்கின் போது கிடா வெட்டிக் கொண்டாட முடிவு செய்துள்ளனர். இந்த தகவல் ஊரிலுள்ள மற்றவர்களுக்கும் பரவ சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை விருந்து நடக்கும் இடத்தில் ஒன்று கூடியுள்ளனர். கிராமத்தின் வெளிப்பகுதியில் நடந்த இந்த விருந்து நிகழ்ச்சியில் நீளமாக இலை வைத்து சோறு மாற்று கிடா கறியை பரிமாறியிருக்கிறார்கள்.

கூட்டத்தில் உள்ள இளைஞர் ஒருவர் இதனை வீடியோ எடுத்து, கொரோனா கொண்டாட்டம் என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலானதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் இது சம்மந்தமாக சுமார் 20 இளைஞர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் விசாரித்ததில் ஜாலிக்கு செய்ததாகவும் இளைஞர்கள் கூறியுள்ளனர். ஊரடங்கு சமயத்தில் கொரோனாவின் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : banquet ,Corona ,Kita ,kiddo party , Curfew, Corruption, Corona, Kita, Feast, Facebook, Video, Youth
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...