×

6 லட்சம் துரித பரிசோதனை கருவிகளில் தமிழகத்திற்கு வெறும் 12,000 கருவிகள் மட்டுமே : மத்திய அரசு பாரபட்சம் ?


சென்னை : கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே 3ம் இடத்தில் இருக்கும் தமிழகத்திற்கு சீனாவிடம் இருந்து வாங்கி இருக்கும் துரித பரிசோதனை கருவிகளை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. சீனாவில் இருந்து 6 லட்சம் துரித பரிசோதனை கருவிகளை வாங்கி இருக்கும் மத்திய அரசு, அவற்றில் இருந்து வெறும் 12,000 கருவிகளை மட்டுமே தமிழகத்திற்கு தர முன்வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு முதற்கட்டமாக 50,000 கருவிகளையாவது வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இது மத்திய அரசின் பாரபட்சமான சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மத்திய அரசை மட்டும் நம்பாமல் தமிழக அரசு சீன நிறுவனத்திடம் நேரடியாகவே 4 லட்சம் கருவிகளை பெறுவதற்கு ஆர்டர் செய்து இருந்தது. இதில் இருந்து கால தாமாதமாகி 24 ஆயிரம் கருவிகள் தமிழகத்திற்கு கிடைக்கப் பெற்று இருக்கிறது. தமிழக அரசு நேரடியாக ஆர்டர் செய்த கருவிகளும் விரைந்து கிடைக்காமல் தாமதம் ஆகுவதற்கும் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே கொரோனா தடுப்புப் பணிகளுக்காக பல்வேறு வழிகளிலும் தமிழகத்திற்கு சேர வேண்டிய ஜிஎஸ்டி, மாநில பேரிடர் நிதி உட்பட சுமார் ரூ.16,000 கோடியை வழங்குமாறு மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்து இருந்தார். ஆனால் மாநில பேரிடர் நிதி ரூ. 510 கோடி ரூபாயை மட்டுமே மத்திய அரசு கொடுத்தது. இதிலும் மத்திய அரசின் பாரபட்சம் வெளிபட்டு இருப்பதாக விமர்சனங்களை உள்ளது.


Tags : Tamil Nadu ,Nadu ,government , Lakhs, Fast, Test, Tools, Tamil Nadu, Central Government, Prejudice, Corona, China
× RELATED வரி நிர்வாகத்தில் எளிய நடைமுறையின்...