×

ஊரடங்கால் கீரைகளைச் சந்தைப்படுத்த முடியாததால், டிராக்டரைக் கொண்டு உழுது கீரைகளை விவசாயிகளே அழிக்கும் சோகம்!!!

வாஷிங்டன் : அமெரிக்காவில் விளைபொருட்களை விற்க முடியாத நிலையில் கலிபோர்னியா விவசாயிகள் பயிரிட்டிருந்த கீரைகளை டிராக்டரைக் கொண்டு உழுது அழித்து வருகின்றனர்.கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

 கொரோனாவை கட்டுப்படுத்த இம்மாதம் முழுவதும் அமெரிக்காவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் ஹால்ட்வில் என்னும் ஊரைச் சேர்ந்த ஜாக் வாசி, தேவ் புக்லியா ஆகியோர் பல நூறு ஏக்கர் பரப்பில் கீரை வகைகளைப் பயிரிட்டு அறுவடை செய்து மிகப்பெரிய உணவகங்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால் ஊரடங்கால் உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால். கீரைகளைச் சந்தைப் படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே பயிரிடப்பட்ட கீரைகளை தாங்களே டிராக்டர்களைக் கொண்டு உழுது அழித்து வருகின்றனர் .ரத்தம், வியர்வை, கண்ணீர் சிந்தி வளர்த்த கீரைகளை அழிப்பது வருத்தமாகத்தான் உள்ளதாகவும், எனினும் வேறு வழியில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.நாள்தோறும் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான கீரைகள் அனுப்பும் ஆர்டர்களை இழந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags : tragedy , Curfew, greens, market, tractor, plow, farmers destroy, tragedy
× RELATED பேருந்து – கார் மோதி விபத்து; 3 பேர் பலி 28 வீரர்கள் காயம்: ம.பி.யில் சோகம்