×

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆனைமலையில் அனைத்து வீதிகளுக்கும் சீல்: போலீசார் தீவிர கண்காணிப்பு

பொள்ளாச்சி:  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை தனிைமப்படுத்தப்பட்டு அனைத்து வீதிகளுக்கும் நேற்று சீல் வைக்கப்பட்டது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியை சேர்ந்த 5 பேர் கொரோனா அறிகுறியுடன் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வசித்த வீட்டிலிருந்து 5 கி.மீ.  தூரத்துக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியை சேர்ந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஆனைமலையை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து, ஆனைமலை நகர் முழுவதும் தடுப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, அனைத்து வீதிகளும் சீல் வைக்கப்பட்டு மக்கள் நடமாட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனைமலை அருகே உள்ள கிராமத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வோர், பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்கின்றனர். ஆனைமலையில் சீல் வைக்கப்பட்ட பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் வெளியாட்கள் யாரேனும் வீதிகளில் நடமாடுகின்றார்களா? என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தடையை  மீறி யாரேனும் வீதிகளிலோ ரோட்டிலோ சுற்றுவது தெரிந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : All Roads ,roads ,Anamalai: Police Surveillance Anamalai ,Corona , Corona, deterrent, All roads , Anamalai, Police ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள 5...