×

இந்தியாவில் 24 பேருக்கு நடத்தும் சோதனையில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி

டெல்லி : இந்தியாவில் 24 பேருக்கு நடத்தும் சோதனையில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால்,ஜப்பானில் 12 பேரின் மாதிரிகளில் ஒருவருக்கு தொற்று உறுதியாகுவதாகவும் விளக்கி இருக்கிறார். அமெரிக்காவை பொறுத்தவரை 5 மாதிரிகளில் ஒருவருக்கு கோவிட்- 19 இருப்பது நிரூபணமாகி உள்ளது. நோய் பரவலை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளால் கொரோனா தாக்கம் இந்தியாவில் 3% ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 13,430 ஆக அதிகரித்துள்ளது. 448 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதே போன்று இந்தியாவில் 24 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்படும் போது தான் ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்படுவதாகவும், பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவான விகிதம் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஜப்பானில் 11 பேருக்கு சோதனை நடத்தப்படும் போது ஒருவருக்கு தொற்று உறுதியாகிறது. அமெரிக்காவில் 5 பேருக்கும், பிரிட்டனில் 3 பேருக்கும், இத்தாலியில் 6 பேருக்கும் சோதனை நடத்துகையில் ஒரு தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது என அது தெரிவித்துள்ளது.அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தொற்று அனைவருக்கும் எளிதாக பரவ வாய்ப்பில்லை என்பதால் தொற்று சோதனை மெதுவாகவே நடத்தப்படுவதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. அதே சமயம் ஹாட்ஸ்பாட்டுகள் மற்றும் தொற்று இல்லாத கிரீன் மண்டலங்களில் ரேபிட் டெஸ்ட் நடத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

Tags : India , India, 24, test, someone, corona, infection, sure
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!