தமிழகத்தில் சிவப்பு ஹாட்ஸ்பாட் பகுதிகளில் கொரோனா சோதனைகளை அதிகரிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: சிவப்பு ஹாட்ஸ்பாட் பகுதிகளில் சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில், 1267 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை தமிழகத்தில் 180 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் மீதம் உள்ள 1,072 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவப்பு ஹாட்ஸ்பாட் பகுதிகளில் சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவிலும் கொரோனா தொற்று அளவு குறைந்து வருவது நிம்மதியளிக்கிறது. சிவப்பு ஹாட்ஸ்பாட் பகுதிகளில் சோதனைகளை அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதன் மூலம் இந்தியாவை கொரோனா இல்லாத நாடாக மாற்ற வேண்டும்” என்றார். மேலும், சென்னை கோயம்பேடு சந்தை கொரோனா தொற்று மையமாக திகழ்வதாகவும், அங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதாக செய்தி வந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, இதில் வழக்கு தொடர என்ன இருக்கிறது? காவல் அரண்களை அதிகப்படுத்தி மக்களின் வருகைத் தடுத்தால் போதுமே என தெரிவித்தார்.

Related Stories:

>