×

போலீசார், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கைவிரிப்பு இளம் பெண்ணிற்கு நடுரோட்டில் குழந்தை பிறந்தது : தெலங்கானாவில் பரபரப்பு

திருமலை:  தெலங்கானாவில் 108 ஆம்புலன்ஸ் சேவை மற்றும் போலீஸ் உதவி கிடைக்காததால் நடுரோட்டில் இளம்பெண்ணிற்கு குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.தெலங்கானா மாநிலம், சூர்யாபேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கண்ணா. இவரது மனைவி  கவிதா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கவிதாவிற்கு நேற்று மாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரது கணவர் வெங்கண்ணா 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தார். அதற்கு தற்போது ஆம்புலன்ஸ் சேவை இல்லை என கூறினார்களாம். இதையடுத்து, போலீசாருக்கு போன் செய்தார். அதற்கு போலீசாரும் தாங்கள் தற்போது வர முடியாது என்று தெரிவித்தனர். இதனால் செய்வதறியாமல் தவித்த அவர், தனது மனைவியை பழைய பஸ் நிலையம்  கூட்ரோடு  வரை நடக்க வைத்து அழைத்துச் சென்றார்.

பின்னர், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று அவர்களின் உதவியை கேட்ட போது அங்கிருந்த காவலர்கள் தற்போது எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்தனர். அதற்குள் கவிதாவிற்கு நடுரோட்டிலேயே பிரசவம் ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது.அப்போது, அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோதாடா  காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சிவராம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை வரும்படி அழைத்தார். ஆனால் அவர்கள் வரமுடியாது என்று தெரிவித்த நிலையில், மீண்டும் அவரே 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்து, கவிதா மற்றும் வெங்கண்ணா, குழந்தையை சூர்யாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார். அங்கு மருத்துவர்கள் குழந்தை மற்றும் தாய் நலமாக இருப்பதாக தெரிவித்தனர். போலீசார், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மருத்துவமனை நிர்வாகம் உதவிக்கு வர மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags : ambulance crews ,teenage girl Police ,Telangana , Police, 108 ambulance,teenage girl,Telangana
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து