×

RBI இன்றைய அறிவிப்புகள் சிறு, குறு தொழில்கள், விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்; பணப்புழக்கம் மேம்படும்...பிரதமர் மோடி டுவிட்

டெல்லி: இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையாத காரணத்தினால், கடந்த 14-ம் தேதி நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் ஊரடங்கை வரும் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், 2-வது முறையாக செய்தியாளர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேட்டியளித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளை கவனித்து வருகிறோம் என்றார்.

மேலும், 2021-22 ல் பொருளாதார வளர்ச்சி 7.4 % ஆக இருக்கும். இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவீதம் என ஐஎம்எப் கணித்துள்ளது. இது ஜி- 20 நாடுகளில் வளர்ச்சி அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகில் ஜிடிபி வளர்ச்சியில் கணிசமாக அதிகரித்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கொரோனாவால், தொழிற்சாலைகள் இயங்காததால், மின்தேவை, 20 சதவீதம் - 25 சதவீதம் குறைந்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் வங்கிகள் வழக்கம் போல் இயங்குவதை ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது. இக்கட்டான சூழ்நிலையிலும், வங்கிகள் வழக்கம் போல் செயல்படுகின்றன. தட்டுப்பாடு கூடாது என்பதற்காக வங்கிகளுக்கு போதிய அளவு ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காலத்தில் இணையதள பயன்பாடு மற்றும் இணையதள பணப்பரிமாற்ற சேவை அதிகரித்துள்ளது. சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் பணம் கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடனுக்கான ரிசர்வ் வட்டி வகிதம் 4% ல் இருந்து 3.75 % ஆக குறைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் கூடுதல் கடன் பெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு ரிசர்வ் வங்கியிடம் 60 சதவீத கடனை மாநில அரசுகள் பெற்று கொள்ளலாம். வாராக்கடன் தொடர்பான கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பணவீக்கம் குறைந்து கொண்டிருக்கிறது என்றார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பால் நாட்டு மக்களிடையே பணப்புழக்கம் பெரிதும் மேம்படுத்துவதோடு கடன் வழங்கலை மேம்படுத்தும். புதிய அறிவிப்புகள் சிறு, குறு தொழில்கள், வணிகம், விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். மேலும், WMA வரம்புகளை அதிகரிப்பதன் மூலம் அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.


Tags : announcements ,businesses ,RBI ,Modi Dwight ,twight , RBI's announcements will be helpful to small, marginal businesses and farmers; PM Modi twight
× RELATED ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு