×

'கொரோனா பணக்கார வியாதி, ஏழைகளுக்கு வராது'என நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு, கொரோனாவை தடுத்த நிறுத்தப் பாருங்கள்! : ஸ்டாலின்


சென்னை : அரசியல் சுயநலத்துக்காகவும், லாபத்திற்காகவும் கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாடிவிட வேண்டாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அரிய வர்க்க பேதக் கண்டுபிடிப்பை வெளியிட்டு நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு, கொரோனா தொற்றை உண்மையில் தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கையைத் தட்டி, விளக்கேற்றி, மணியடித்து கொரோனாவை விரட்டிவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது.பேட்டி கொடுத்தே, அதில் அரசியல் செய்தே கொரோனாவை ஒழித்திடலாம் என மாநில அரசு நினைக்கிறது.

மத்திய, மாநில அரசுகளின் நடுவே மக்களின் வாழ்க்கை ஊசலாடிக் கொண்டு இருக்கிறது.நல்வாழ்வுத் துறை செயலாளர், அமைச்சர், தலைமைச் செயலாளர் மாறி மாறி கொரோனா குறித்து பேட்டி அளிக்கின்றனர்.கிளைமேக்ஸ் காட்சி போல செய்தியாளர்களை முதல்வர் தலைமை செயலகத்தில் சந்தித்தார்.கொரோனாவை ஒழித்துவிட்டதாக தனக்குத் தானே முதுகில் தட்டி முறுவலித்துக் கொள்கிறார் முதல்வர்.இன்னும் ஓரிரு நாளில் தமிழகத்தில் கொரோனாவே இருக்காது என முதல்வர் ஆரூடம் கூறியிருக்கிறார். முதல்வர் கூறிய புள்ளி விவரத்தை பார்த்தால் தமிழக மக்களை ஏமாற்றுகிறாரோ என்ற ஐயம் எழுகிறது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக கூறும் முதல்வரை பார்த்து அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை.தமிழகத்தில் இதுவரை 17,835 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 18,000 என்பது எத்தனை சதவீதம் என்று முதல்வருக்கு யாராவது கூற வேண்டும்.

பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள். உபகரணங்கள், கருவிகளை உடனடியாக வாங்குங்கள். பிழையான, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் தராதீர்கள். எப்படியாவது மக்களைக் காப்பாற்றுங்கள்.நோயை மறைப்பது என்பது உங்களை ஏமாற்றிக் கொள்வது மட்டுமல்ல; நாட்டு மக்களை ஏமாற்றுவதுமாகும்.உங்களது அரசியல் சுயநலத்துக்காகவும், லாபத்திற்காகவும் கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாடிவிட  வேண்டாம் என்று திரும்பத் திரும்பக்  கேட்டுக் கொள்கிறேன்.கொரோனா என்பது பணக்கார வியாதி, ஏழைகளுக்கு வராது என்ற அரிய வர்க்க பேதக் கண்டுபிடிப்பை வெளியிட்டு நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு, கொரோனா தொற்றை உண்மையில் தடுத்த நிறுத்தப் பாருங்கள்! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : No Poor ,Stalin ,Corona ,poor , Corona, rich, sick, poor, comedy, Stalin
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...