×

மொத்த, சில்லறை விற்பனை அங்காடிகளில் விலைப்பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்: எம்.ஆர்.பி.க்கு மேல் விற்க கூடாது,.. விக்கிரமராஜா எச்சரிக்கை

சென்னை: மொத்த, சில்லறை விற்பனை அங்காடிகளில் விலைப்பட்டியல்களை பொதுமக்கள்  பார்வைக்கு வைக்க வேண்டும் என்று விக்கிரமராஜா கூறியுள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மொத்த, சில்லறை விற்பனை அங்காடிகளில்  விலைப்பட்டியல்களை வாடிக்கையாளரின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் முதல் கட்டமாக சென்னை வடபழனி சைதாப்பேட்டை  சாலையில் இருக்கும் ஆர்.கே.ஸ்டோரில் விலைப்படியலை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா விலைப் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கதுல்லா, சென்னை மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம், கூடுதல் செயலாளர்கள் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார், வி.பி.மணி, செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், மாவட்ட தலைவர் எஸ்.சாமுவேல் உள்ளிட்ேடார் கலந்து கொண்டனர். தொடர்ந்து விக்கிரமராஜா அளித்த பேட்டியில், “அனைத்து வணிகர்களும் விலைப்பட்டியலை வெளியிட வேண்டும். எம்.ஆர்.பி.விலைக்கு மேல் எக்காரணம் கொண்டும் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. இன்றைய அசாதாரண சூழ்நிலையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் முற்றிலும் செயல்படாமல் பொதுமக்களை  புறக்கணித்துள்ளன. நமது உள்நாட்டு வணிகர்கள் மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

ஊரடங்கு முடிந்த பின்பும் முழுமையான ஆதரவை வாடிக்கையாளர்கள் வழங்கி ஆன்லைன் வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்’’ என கூறினார். விலை விவரம்: விலைப்பட்டியலில் சர்க்கரை(ஒரு கிலோ) 45, துவரம்பருப்பு128, பச்சை பருப்பு 135, உளுந்தம்பருப்பு 139, கடலைப்பருப்பு 80, தோசை புளி 150, தும்கூர் புளி 230, பூண்டு பெரியது 180, கோல்ட் வின்னர் 110, மிளகு 65, சீரகம் 35, கடுகு 12, வெந்தயம் 12, சோம்பு 20 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : retail stores ,Wickremarajah ,MRP , Wholesale, Retail Store, Public, Wickramarajah
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை