×

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்துக்கு ரேஷன் பொருள் ‘டோர் டெலிவரி’: பணியாளர்களுக்கு அரசு உத்தரவு

சென்னை: கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினருக்கு ரேஷன் பொருட்களை நேரடியாக இல்லங்களுக்கு சென்று வழங்க  கடை பணியாளர்களுக்கு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.   இதுதொடர்பாக சென்னை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை துணை ஆணையர் சண்முகவேலு  தமிழ்நாடு நுகர்பொருள் வாணி கழக முதுநிலை மண்டல மேலாளர், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:  கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அவர்தம் பொது விநியோக திட்ட உரிமை அளவான நிவாரண நிதி மற்றும் இன்றியமையாப் பண்டங்களை அந்த குடிமக்கள் இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவர் தம் இல்லங்களுக்கே சென்று விநியோகிக்க வேண்டும்.

சென்னை மாநகரில் பல பகுதிகளில் இல்லங்களில் குடும்ப உறுப்பினர்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களின் விவரங்களை பெறப்பட்டு, அவர்களின் முகவரியின் அடிப்படையில் அந்தெந்த தெருக்கள் இணைக்கப்பட்ட நியாயவிலை கடைகள் கண்டறியப்பட்டுள்ளது. கடைவாரியான விவரங்கள் ஒவ்வொரு உதவி ஆணையர் அலுவலத்திலும் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 6917 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஆவடி 99, அம்பத்தூர் 1447, அண்ணாநகர் 1150, பெரம்பூர் 879, ஆர்கேநகர் 409, ராயபுரம் 241, திருவொற்றியூர் 531, வில்லிவாக்கம் 1923 என மொத்தம் 6917 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பட்டியலின் அடிப்படையில் குடும்ப அட்டைதாரரர்களுக்கு பொருட்கள் இல்லங்களிலேயே நேரடியாக வழங்கப்படுகிறது.

* ஒவ்வொரு கடையிலும் குறைந்த பட்சம் ஒரு அட்டையும் அதிகபட்சமாக சுமார் 40 அட்டைகள் உள்ள நிலையில் பட்டியலின் அடிப்படையில் கடை பணியாளர் உரிய சுயபாதுகாப்புடன் (முககவசம், கையுறை) அணுகி அந்த குடும்பம் வைத்துள்ள அட்டை விவரம், அட்டையின் தகுதிக்குரிய அளவு உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க வேண்டும்.
* குறிப்பிட்ட அட்டையில் உள்ள அட்டைதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பொருட்களை இல்லங்களில் விநியோகிக்க தகுதியுடைய தேதி/நேரம் தேர்வு செய்யப்பட்டு அதனை முன்கூட்டியே அட்டைதாரர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

* அட்டைதாரர் அவரது முகவரியில் பொருட்களை பெற்றுக்கெண்டதற்கான ஆதாரமாக சென்னை மாநகராட்சியால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம் என இல்லங்களில் ஒட்டப்
பட்டுள்ள தகவலின் கீழ் பொருட்களின் பொட்டலத்தினை வைத்து செல்பேசி வாயிலாக புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பணியினை ஒரு வார காலத்திற்குள்ளாக மேற்கொண்டு முழுமையாக முடிக்க வேண்டும்.

Tags : Corona , Corona, Time Door Delivery Code, Government of Tamil Nadu
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...