×

உலக நாடுகள் திணறி வரும் நிலையில் கொரோனாவை வென்று காட்டிய தைவான்: அரசு, தனியார் நிறுவனங்கள் இணைந்து நடவடிக்கை

தைபே : தைவான் தீவில் கொரோனா பாதிப்பு குறித்து தைவான் ஜனாதிபதி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்த நூற்றாண்டுகளில் நாம் பார்க்காத கஷ்டங்கள் இல்லை. மேலும் நாம் நம்முடைய சூழ்நிலையை சமாளிக்கவும், மாற்றியமைக்கவும் எப்போதும் முயற்சி மேற்கொண்டு வெற்றி பெற்று வருகின்றோம். அதே போல் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளோம். கொரோனா வைரஸ் மிக பெரிய தொற்று ஆக இருந்த போதிலும், அதிலும் நமக்கு மிக அருகில் மக்கள் பாதிக்கப்பட்ட போதும் தற்போது வரை தைவானில் 400 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா தொற்று பரவாமல் பெற்ற வெற்றி தற்செயல் நிகழ்வு அல்ல என்றும் மருத்துவ வல்லுநர்கள், அரசு, தனியார் துறை மற்றும் மக்கள் ஆகியவற்றின் முயற்சிகளின் கலவையானது என தெரிவித்துள்ளார். 2003ம் ஆண்டு சார்ஸ் வைரஸ் கொடுத்த வேதனையான பாடம் மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடம் அவ்வளவு கொடியது.

ஆகையால் இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரபித்ததில் இருந்து அரசும், மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டது. டிசம்பரில் சீனாவின் ஊகானில் கொரோனா பரவ ஆரம்பிக்கும் போதே வெளிநாட்டில் இருந்து வருபவர்களை சோதனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கையாள மத்திய கொரோனா சிறப்பு கட்டுப்பாடு அறை இயங்க தொடங்கியது. மேலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் வகைப்படுத்தி சோதனை செய்யப்பட்டது, தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கவைக்க அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். ஜனவரி 21ம் தேதி முதல் கொரோனா தைவானில் கண்டறியப்பட்டதில் இருந்து அவருடைய பயண வரலாறு மேலும் அவருடைய தொடர்புகள் ஆராயப்பட்டு அவர்களையும் தனிமைப்படுத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

தைவானில் உலகின் சிறந்த சுகாதார அமைப்புகள், வலுவான ஆராய்ச்சி திறன்கள் மற்றும் வெளிப்படையான தகவல்கள் மூலம் மக்களுக்கு அவ்வப்போது தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து டீம் தைவான் என்று உருவாக்கி மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. இதனால் கொரோனா என்னும் கொடிய வைரஸ் தைவானில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கொரோனா குறித்து தங்களது ஆய்வுகளை உலக நாடுகளிடம் பகிர தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மக்கள் ஒன்றிணைந்து சவால்களை கடந்து சமூக விலகலை கடைபிடித்தால் வெற்றி பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags : Taiwan ,companies ,Corona ,state ,warming , World Countries, Corona, Taiwan
× RELATED தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த...