×

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு: சென்னையில் பாதித்தவர்களில் ஆண்களே அதிகம்..மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் கொரோனா நோய்த்தொற்றில் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களே அதிகம் என சென்னை மாநகராட்சி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 214 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில், 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 18 பேர் குணமடைந்து உள்ளனர். அதன்படி, சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 63 பேரும், திருவிக நகரில் 30 பேரும், கோடம்பாக்கத்தில் 24 பேரும்,  அண்ணாநகரில் 22 பேரும்,  தடையார்ப்பேட்டையில் 19 பேரும், தேனாம்பேட்டையில் 16 பேரும் உள்ளனர்.

 மேலும், பெருங்குடி மற்றும் அடையாறில் 7 பேரும், வளசரவாக்கத்தில் 5 பேரும், திருவொற்றியூரில் தலா 4 பேரும், மாதவரத்தில் 3 பேரும், ஆலந்தூரில் 3 பேரும், சோழிங்கநல்லூரில் 2 பேரும் உள்ளனர்.
உயிரிழந்தவர்கள் ராயபுரத்தில் 3 பேரும், திருவிக நகரில் 1 நபரும், தண்டையார்பேட்டையில் 1 நபரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குணம் அடைந்தவர்கள் ராயபுரத்தில் 1 நபரும், கோடம்பாக்கத்தில் 5 நபரும், அண்ணாநகரில் 7 பேரும், தேனாம்பேட்டையில் 1 நபரும், அடையாறில் 1 நபரும், வளசரவாக்கத்தில் 2 நபரும், ஆலந்தூரில் 1 நபரும் உள்ளனர். சென்னையில் மணலி மற்றும் அம்பத்தூரில் இது வரை கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் யாரும் இல்லை.

Tags : Corona ,Chennai ,Men ,Tamil Nadu ,Males , Tamil Nadu, Corona, Madras, Men, Corporation
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...