×

மின் இணைப்பு இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி: யானைகள் நடமாட்டத்தால் மேலும் சிக்கல்

கூடலூர்: நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 3 மற்றும் நான்குக்கு உட்பட்ட  தேவாலா அட்டி பகுதியில் உள்ள வாளவயல் அட்டி, வாள மூலை, பிலா மூலை, பணிக்க மூலை, புஞ்சைமூலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதேபோல் இப்பகுதிகளில் தெருவிளக்கும் வசதியும் இல்லை. சுற்றுவட்ட பகுதிகளில்  பெரும்பாலான விவசாயிகளின் வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைத்துள்ள நிலையில் இப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 100 க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளர் குடும்பங்கள் கடந்த பல வருட காலமாக மின் இணைப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். சிறு விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளிகளாக உள்ள இவர்கள் வசதி படைத்தவர்களை போல் சோலார் மின் வசதி செய்து கொள்ள முடியாத நிலையிலும் உள்ளனர். இப்பகுதிகளுக்கு அடிக்கடி காட்டு யானைகள் வந்து செல்வதால் மாலை, இரவு  மற்றும் அதிகாலை நேரங்களில்  வெளிச்சம் இல்லாததால் அவசர தேவைகளுக்கு கூட வெளியே சொல்ல முடியாத நிலையில் உள்ளனர். தங்கள் குடியிருப்புகளுக்கு மின் வசதி மற்றும் தெருவிளக்கு வசதி கோரி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் வருவாய் துறைக்கு மனு அளித்துள்ளனர். எனினும் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள தங்கள் பகுதியில் வீடுகளில் குழந்தைகள் வயதானவர்கள் அச்சத்துடனேயே வசிக்க வேண்டி உள்ளதால் விரைவாக மின் இணைப்பு மற்றும் தெரு விளக்கு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post மின் இணைப்பு இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி: யானைகள் நடமாட்டத்தால் மேலும் சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Valavayal ,Devala Atti ,Nellialam ,Dinakaran ,
× RELATED கூடலூர் அருகே காட்டு யானைகளிடம்...