×

உள்நாட்டிலேயே தயாராகும் ரேபிட் டெஸ்ட் கருவிகள்: தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்கள்

டெல்லி: கொரோனா தொற்றை விரைவாக கண்டுபிடிக்க உதவும் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை தயாரிக்கும் பணியில் இரண்டு இந்திய நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. சீனாவில் இருந்து உருவான கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை மரண பீதியில் வைத்துக் கொண்டுள்ளது. ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்து இல்லை. குணமாக்கும் மருந்துகளும் இல்லை.

கொரோனாவுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா என்று கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட் சீனா கண்டறிந்துள்ளது. இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எந்தளவிற்கு இருக்கிறது என்பதை அறிந்து அதன்பின்னர் பிசிஆர் டெஸ்ட் மூலம் துல்லியமாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை அறிய முடியும். இந்த கிட் இந்தியாவில் குறைந்த அளவே கிடைத்து உள்ள நிலையில், மேலும் 3,00,000 ரேபிட் டெஸ்ட் கிட்ஸ்களுக்கு சீனாவிடம் இந்தியா ஆர்டர் கொடுத்து இருந்தது.

இந்நிலையில் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் உரிமங்களை பெற்று டெல்லியில் உள்ள வான்கார்ட் டயாக்னாஸ்டிக்ஸ் என்ற நிறுவனமும், கேரளாவில் உள்ள இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் லேட்டக்ஸ் நிறுவனமும் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளின் உற்பத்தியை துவக்கி உள்ளன. இந்துஸ்தான் லேட்டக்ஸ் நிறுவனம் இன்னும் 4 அல்லது 5 தினங்களில் ஒரு லட்சம் கிட்டுகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வான்கார்டு 3 வாரங்களில் அவற்றை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இவை தவிர குஜராத்தில் உள்ள வாக்ஸ்டர் பயோ லிமிட்டட் விரைவில் உற்பத்தியை துவக்கும் எனவும் கூறப்படுகிறது.


Tags : Indian ,companies , Rapid Test Tools, Manufacturing Company, Indian Companies
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்