×

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கிறது. தினமும் 2 மணி நேரமாவது டாஸ்மாக் கடைகளை திறக்க கோரி வழக்கு தொடரப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் முல்லா டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மது அருந்துவோர்களுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து டாஸ்மாக் கடைகளை குறைந்தபட்சம் 2 மணி நேரம் மட்டும் திறந்து வைக்க வேண்டும் அதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த வசந்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து மனுதாரர் தரப்பில் சில வாதங்களை முன்வைக்கப்பட்டது. திடீரென மது அருந்துவதை நிறுத்திவிட்டால் இதயத் துடிப்பு அதிகமாகி சுவாச பிரச்சனை ஏற்படும், மேலும் மது விற்பனை நிறுத்தப்பட்டதால் பல்வேறு டாஸ்மாக் கடைகளை உடைத்து மதுபாட்டில்களை கொள்ளையடிக்கின்றனர்.

மேலும் போதைக்காக மெத்தனால் போன்ற ரசாயனத்தை குடித்து உயிரிழக்கும் சம்பவங்களும் தற்போது நடைபெற்று வருகின்றதாக தெரிவித்தனர். எனவே நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் டாஸ்மாக் கடைகளை உத்தரவிட கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே அரசு தரப்பில் வாதாடிய போது  அசாம் போன்ற மாநிலங்களில் ஊரடங்கு நேரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நேரத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரிக்கும் இதனால்  டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை தமிழக அரசுக்கு இன்று சுட்டிக்காட்டிய பின்னர், அதனை பதிவு செய்து ஊரடங்கு நேரத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

Tags : task force ,HC ,Tamil Nadu , Tamil Nadu, Task Shops, Petitions, Discounts, High Court
× RELATED நாடாளுமன்றத் தொகுதி வாரியாக அதிமுக...