×

மருத்துவ, வாகனக் காப்பீடு புதுப்பிக்க மே 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு : மத்திய அரசு

டெல்லி : மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு செய்துள்ளவர்கள் புதுப்பிக்க வேண்டிய காலக்கெடு மார்ச் 25 முதல் மே 3 வரையிலான ஊரடங்கு காலத்தில் முடிந்தால், அதை மே 15ஆம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ளலாம்.இதற்கான அறிவிக்கையை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதேபோல் ஊரடங்கு காலக்கட்டத்தில் காப்பீட்டுத் தொகை கோரி வரும் விண்ணப்பங்களைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் எனவும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags : Medical, auto insurance, premium, amount, term, extension
× RELATED வட மாநிலங்களில் வாட்டிவரும் வெப்ப அலை: உ.பி.யில் 25 தேர்தல் பணியாளர்கள் பலி