×

கிட்டாம்பாளையம் ஊராட்சியில் வவ்வால்கள் மூலமாக பரவுமா? கொரோனா பீதியில் கிராம மக்கள்: பாதுகாக்க கோரி கலெக்டரிடம் மனு

சோமனூர்: தமிழகம் உள்ளிட்ட 4 மாநில வவ்வால்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கோவை அருகே உள்ள கிட்டாம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் தங்கியிருக்கும் 4 ஆயிரம் வவ்வால்களினால் அப்பகுதியில் இருக்கும் பொதுமக்களுக்கு பீதி ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சோமனூர் அடுத்த கிட்டாம்பாளையம் ஊராட்சியில் உள்ள 5 மரங்களில் ஆண்டாண்டு காலமாக ஆயிரக்கணக்கான வவ்வால்கள் தங்கி வாழ்ந்து வருகின்றன. இங்கு தங்கியிருக்கும் வவ்வால்கள் இரவில் இரை தேடி ஊட்டி, குன்னூர், சத்தியமங்கலம் தாளவாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவிட்டு பகல் நேரத்தில் மீண்டும் கிட்டாம்பாளையம் திரும்பி விடுகின்றன.இவற்றை ஊர்மக்கள் தங்களுடைய செல்ல பிள்ளைகள்போல பாதுகாத்து  வந்தனர். இந்நிலையில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று வவ்வால்களின் தொண்டையில் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்ததையடுத்து இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இது குறித்து கிட்டாம்பாளையம் ஊராட்சி தலைவர் வி.எம்.சி. சந்திரசேகரிடம் ஊர் பொதுமக்கள் முறையிட்டுள்ளனர். அவர் இது குறித்து கோவை கலெக்டர் ராஜாமணியை நேரில் சந்தித்து மனு அளித்தார். பொதுமக்கள் எந்த வகையிலும் அச்சப்பட தேவையில்லை என்று ஊராட்சி தலைவரிடம் கலெக்டர் கூறியுள்ளார். மேலும் வவ்வால்களிடமிருந்து முழுமையாக மக்களை பாதுகாக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும், மனிதர்களுக்கு எந்த தாக்கமும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவும் ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. கிட்டாம்பாளையம் ஊராட்சி பகுதியில் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வவ்வால்களால் மக்களுக்கு தொந்தரவு ஏற்படாதவாறு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags : Kitavampalayam ,collector ,panic ,Corona ,petitioner collector , Is Kitavampalayam ,bats , panchayat? Villagers ,Corona panic, collector seeking protection
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...