×

15 மளிகை பொருட்களுக்கு புதிய விலைப் பட்டியல் வெளியீடு: அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை: வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா

சென்னை : மளிகை பொருட்களுக்கு அதிக விலை வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனாவால் மளிகைப் பொருட்களின் விலை உயர்வு என்ற குற்றச்சாட்டை தடுக்க புதிய விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விலைப்பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த புதிய பட்டியல் மூலம் குற்றச் சாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

வரும் காலங்களில் புதிய விலை பட்டியலிலுள்ள விலைகளும் குறையக் கூடும் என்றும் செயற்கை விலை ஏற்றத்திற்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.மேலும் வீடு வீடாக சென்று மளிகை பொருட்கள் வழங்கும் சேவை நடைபெற்று வருகிறது என்றும் மளிகை பொருட்களுக்கு அதிக விலை வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அதேபோன்று இடைக்கால வியாபாரிகள் என்று சொல்லிக்கொண்டு வியாபாரம் செய்பவர்கள் விலை ஏற்றி விற்பனை செய்யக் கூடாது என்பதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும் இந்த விலைப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இந்த கொரோனா தொற்றின் முலமாக பொதுமக்களுக்கு ஒரு பைசா கூட ஏற்றி விற்பனை செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம், ஆகவே எந்த வியாபாரியாக இருந்தாலும் MRP rate-க்கு அதிகமாக விற்பனை செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவின் தாக்கம் இருக்கும்வரை ஊரடங்கில் அவதிப்படும் அமைப்புசாரா தொழிலாளர்களான சலூன் கடை ஊழியர்கள், தையில் கடைக்காரர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.5,000 ரொக்கமாகவும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை தர வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். அதேபோன்று EMI-யை மத்திய அரசு 3 மாதத்திற்கு தள்ளுபடி செய்திருந்தாலும் கூட அதை மீண்டும் கட்டுவதற்கு அதிகப்படியான வட்டியை செலுத்த வேண்டியிருக்கிறது. ஆகவே இடைக்காலத்திலே ஊரடங்கு முடியும் வரை எந்த வங்கியிலும் வாங்கிய கடனுக்கு வட்டி இருக்க கூடாது என்பதை மத்திய மாநில அரசுகள் புரிந்துக்கொண்டு சாதாரண மக்களை வாழ வைக்க வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

Tags : Wickramarajah ,Merchant Association ,selling ,vikramaraja , Curfew, Price List, Issue, Merchant Association President, vikramaraja
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறை தளர்வு வணிகம்...