×

வேளாங்கண்ணி அருகே கூண்டில் சிக்கிய அரியவகை மரநாய்

நாகை: வேளாங்கண்ணி அருகே தோட்டத்தில் வைத்திருந்த கூண்டில் அரிய வகை மரநாய் சிக்கியது. வேளாங்கண்ணி அருகே தெற்குபொய்கைநல்லூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனது தோட்டத்தில் காய்கறி செடிகள் பயிரிட்டுள்ளார். எலிகள் தொல்லை அதிகமாக இருப்பதால் அதை பிடிக்க கூண்டு வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று ராஜ்குமார் தோட்டத்திற்கு சென்று பார்த்தார். அப்போது கூண்டில் புதிதாக ஏதோ ஒரு விலங்கு மாட்டிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அரியவகை இனத்தை சேர்ந்த மரநாய் என கூறினர். உடனே இது குறித்து நாகை வன பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வன அலுவலர்கள் அரியவகை மரநாய் என்பதை உறுதி செய்து விட்டு அதை காட்டுப் பகுதியில் விடுவதற்காக எடுத்து சென்றனர்….

The post வேளாங்கண்ணி அருகே கூண்டில் சிக்கிய அரியவகை மரநாய் appeared first on Dinakaran.

Tags : Velankanni ,South Poikainallur Keezhatheru ,Dinakaran ,
× RELATED வேளாங்கண்ணி – எழும்பூர் ரயில் புறப்படும் நேரம் மாற்றியமைப்பு!!