×

மளிகை பொருட்களுக்கு அதிக விலை வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை :வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா எச்சரிக்கை

சென்னை : கொரோனாவால் மளிகைப் பொருட்களின் விலை உயர்வு என்ற குற்றச்சாட்டை தடுக்க புதிய விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய பட்டியல் மூலம் குற்றச் சாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் புதிய விலை பட்டியலிலுள்ள விலைகளும் குறையக் கூடும் என்றும் செயற்கை விலை ஏற்றத்திற்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.மேலும் வீடு வீடாக சென்று மளிகை பொருட்கள் வழங்கும் சேவை நடைபெற்று வருகிறது என்றும் மளிகை பொருட்களுக்கு அதிக விலை வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


Tags : Wickremarajah ,Trade union , Groceries, Pricing, Sales, Action, Merchants Association, Chairman, Wickremarajah, Warning
× RELATED அரசுத்துறைகளில் பணிபுரியும்...