×

பைக்கில் கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது

சென்னை: வடபழனி போலீசார் ேநற்று முன்தினம் ஆற்காடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் பைக்கில் வந்தார். போலீசாரை கண்டதும் பைக்கை திருப்பி வேகமாக தப்பி செல்ல முயன்றார். போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகமடைந்த போலீசார் அவர் ஓட்டி வந்த பைக்கை சோதனை செய்தனர். அப்போது ஒரு அடி நீளமுள்ள கத்தி இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த புவனேஸ்வர் (35) என்பதும், காய்கறி மற்றும் மரம் வெட்டும் தொழில் செல்வதால் கத்தி வைத்திருந்தாக கூறினார். ஆனால் போலீசார் தற்போது எந்த பணிகளும் இல்லாத நிலையில் கத்தி கொண்டு வந்ததால் யாரேனும் கொலை செய்யும் நோக்கில் கத்தி கொண்டு வந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரிடம் இருந்து போலீசார் கத்தி மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

Tags : Arrested youth , knife , bike
× RELATED பேருந்து நிலையத்தில் செல்போன் திருட்டு