×

திருமண ஆசை காட்டி கைவரிசை டிக்-டாக்கில் பழக்கமான பெண்ணிடம் நகை மோசடி: ஈரோட்டில் டிரைவர் கைது

ஈரோடு: ஈரோட்டில் டிக்-டாக் மூலம் பழக்கமான பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நகை, பணம் மோசடி செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மரப்பாலத்தை சேர்ந்தவர் உமர்செரீப் (32), டிரைவர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். உமர்செரீப், டிக்-டாக் செயலியில் தனக்குத்தானே பலவிதமான கோணங்களில் வீடியோ எடுத்து வெளியிட்டார். இவரது வீடியோவை பார்த்த பலரும் லைக் செய்தனர். இந்த டிக்-டாக் செயலி மூலம் ஈரோட்டைச் சேர்ந்த 34 வயது பெண், உமர்செரீப்புக்கு பழக்கமானார். அவருக்கும் திருமணமாகி ஒரு மகள், மகன் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து வாழ்கிறார்.

அவரிடம் உமர்செரீப் தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும், அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது. பின்னர் இருவரும் தம்பதிகளாக வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதை உமர்செரீப் பயன்படுத்தி அந்த பெண்ணிடம் 10 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் பணம் வாங்கினார். அதன்பின், அவரை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் சந்தேகமடைந்து, மரப்பாலம் பகுதியில் விசாரித்தபோது அவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. எனவே தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி நகை, பணத்தை மோசடி செய்ததாகவும், இதுதொடர்பாக கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் உமர்செரீப் மீது ஈரோடு டவுன் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து உமர்செரீப்பை கைது செய்தனர்.

Tags : Erode , Marriage, jewelery fraud, Erode, driver arrested
× RELATED போலி உரம், பூச்சிக்கொல்லி மருந்து...