×

குஜிலியம்பாறை அருகே நில அதிர்வு?

குஜிலியம்பாறை: திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள ராமகிரியில் நேற்று காலை 11 மணியளவில் குட்டி விமானம் ஒன்று தாழ்வாக பறந்து சென்றது. சிறிது நேரத்தில் ராமகிரி, சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென நில அதிர்வு போன்று பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை  விட்டு வெளியே ஓடி வந்தனர்.  அவர்கள் கூறுகையில், ‘‘ராமகிரியில் உள்ள தொப்பைசாமி மலையடிவார பகுதியில் இருந்தே இந்த அதிபயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக தெரிகிறது. விமானம் ஏன் தாழ்வாக பறந்து சென்றது?, அது பறந்து சென்ற சிறிது நேரத்தில் வெடிச்சத்தம் ஏற்பட காரணம் என்ன? என்று மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றனர்.

Tags : Earthquake ,Kujiliyampara ,Kujiliyambara , Earthquake , Kujiliyambara
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்