×

சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி பாந்த்ராவில் ஆர்ப்பாட்டம்,..வெளிமாநில தொழிலாளர்களை போராட்டத்துக்கு தூண்டியவர் கைது

மும்பை: வெளிமாநிலத் தொழிலாளர்களை போராட்டத்தில் ஈடுபட தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்ட நவி மும்பையைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மும்பையில் நேற்று முன்தினம் ஆயிர்க்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள்(உ.பி., பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் மாநிலங்களை சேர்ந்தவர்கள்) பாந்த்ரா ரயில் நிலையம் அருகே திடீரென ஒன்று திரட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சொந்த ஊர்களுக்கு செல்ல தங்களுக்கு ரயில் மற்றும் பஸ் வசதிகளை செய்யும்படி அவர்கள் கோரினர். ஆனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.இதற்கிடையே, வெளிமாநிலத் தொழிலாளர்களை போராட்டத்துக்கு தூண்டியதாக நவி மும்பையைச் சேர்ந்த வினய் தூபே என்பவரை போலீசார் நேற்றுக் காலை கைது செய்தனர். பின்னர், அவர் பாந்த்ரா போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

‘‘வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல ஏப்ரல் 18ம் தேதிக்குள் ரயில் சேவைக்கு ஏற்பாடு செய்யப்படாவிட்டால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முன்வர வேண்டும்’ என்று வினய் துபே டிவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்துதான் பாந்த்ராவில் ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. அவர் மீது இரு குழுக்களிடையே வன்முறையை தூண்டுதல், நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்படுதல், குற்றம் செய்ய தூண்டுதல், அரசு அதிகாரியின் உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்தல், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தொற்று நோய் பரவும் விதத்தில் செயல்படுதல் மற்றும் தொற்றுநோய் தடுப்புச் சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வினய் தூபேயிடம் விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் கூறினர்.



Tags : Demonstrators ,Bandra ,hometown , Outstation workers, protest, corona, arrest
× RELATED தமிழ்நாடு அணியுடன் ரஞ்சி அரையிறுதி...