×

கொரோனாவால் பொருளாதார சீரழிவு,..அமெரிக்காவை சீரமைக்கும் குழுவில் சுந்தர் பிச்சை உள்பட 6 இந்தியர்கள்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: கொரோனா பாதிப்பினால் சீரழிந்த அமெரிக்காவின் பொருளாதாரத்தை புதுப்பிக்கும் தொழிலதிபர்கள் அடங்கிய நிபுணர்கள் குழுவில் இடமபெறும்படி கூகுள் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் சத்ய நாதெள்ளா ஆகியோருக்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நிருபர்களை சந்தித்த அதிபர் டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க பொருளாதாரத்தை புதுப்பிக்க பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவை மீட்க எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் பேசினார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், விவசாயம், வங்கித்துறை, கட்டுமானம், கட்டுமானத் தொழிலாளர்கள், பாதுகாப்பு, எரிசக்தி, நிதி சேவைகள், உணவு பொருட்கள், சுகாதாரம், மருத்துவமனை, உற்பத்தி, ரியல் எஸ்டேட், சில்லரை வர்த்தகம், தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு, போக்குவரத்து, விளையாட்டு ஆகிய துறைகளை சார்ந்த வல்லுனர்கள், எதிர்கால அமெரிக்காவின் வளமான வளர்ச்சிக்கு வெள்ளை மாளிகையுடன் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் அமெரிக்கர்களின் ஆரோக்கியம், வளமே இதன் முக்கிய குறிக்கோளாக இருக்கும். இந்த குழுக்கள் தன்னிறைவு பெற்ற, சுதந்திரமான, எதையும் தாங்கும் அமெரிக்காவை உருவாக்கும்.

இந்த குழுவில் இடம் பெற்றுள்ள சிறந்த புத்திசாலிகள், அறிவாளிகள் பல ஆலோசனைகளை வழங்குவார்கள் என்று டிரம்ப் கூறினார். அவர் வெளியிட்ட 200 தொழில்துறை முன்னணி பிரபலங்களில், தொழில்நுட்பத் துறையில் கூகுள் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் சத்ய நாதெள்ளா, ஐபிஎம் அரவிந்த் கிருஷ்ணா, மைக்ரோன் சஞ்சய் மெக்ரோத்ரா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் தவிர, உற்பத்தி துறையில் பெர்னோட் ரிச்சர்ட் நிறுவனத்தின் ஆன் முகர்ஜி, நிதித் துறை குழுவில் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் அஜய் பங்கா ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Trump ,Indians ,reform committee ,United States ,Corona ,Align ,announcement ,Sundar Pichai ,team , Corona, economic degradation, Sunder bitch, 6 Indians, President Trump
× RELATED தேர்தலில் தோற்றால் ரத்தகளறி ஏற்படும்:...