×

ஆயிரம் குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்கி நடிகர் பிரகாஷ்ராஜ் உதவி

சென்னை: ஆயிரம் குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்கி நடிகர் பிரகாஷ்ராஜ் உதவி செய்தார். நடிகர் பிரகாஷ்ராஜ், அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் செய்து வருகிறார். கொரோனா பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் தினக்கூலி தொழிலாளர்கள் பலரும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். கர்நாடகத்தில் இதுபோல் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களில் ஆயிரம் குடும்பத்தாருக்கு உதவ பிரகாஷ்ராஜ் முடிவு செய்தார். அதன்படி அவர்களின் குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்கியுள்ளார்.


Tags : Prakashraj ,families , Groceries, actor Prakashraj
× RELATED “கலைஞர் இருக்கும் வரை எவராலும் வாலாட்ட முடியவில்லை..” : நடிகர் பிரகாஷ்ராஜ்