×

சித்திரை திருவிழாவை நடத்தக் கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் கிளை மறுப்பு....பக்தர்கள் ஏமாற்றம்

மதுரை: மதுரையில் சித்திரை திருவிழாவை நடத்தக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மதுரை இ.எம்.ஜி. யாதவா அறக்கட்டளைச் சேர்ந்த அருண் என்பவர் காணொலி காட்சி மூலம் முறையிட்டார். மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த இ.எம்.ஜி.அருண் போத்திராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது; மதுரையில் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரபலமானது.

இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண பல லட்சக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். சித்திரை திருவிழாவின் போது வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் மதுரைக்கு வரும் போதும், திருவிழா முடிந்து அழகர்கோவிலுக்கு திரும்பி செல்லும் போதும் வழிகளில் உள்ள அனைத்து மண்டகபடிகளிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அப்போது எங்கள் அறக்கட்டளைக்கு சொந்தமான மண்டகபடியிலும் எழுந்தருளுவார். தற்போது கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் சித்திரை திருவிழாவுக்கான எந்த ஏற்பாடுகளை அதிகாரிகள் தொடங்காமல் உள்ளனர். நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவை தொடர்ந்து நடத்த வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்நிலையில் நீதிபதிகள் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க அனுமதி மறுத்துவிட்டனர். ஊரடங்கு உத்தரவால் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டு அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் தொடங்கப்பட்ட பின் வழக்கு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : festival ,branch ,Echota ,pilgrims ,ICT branch ,film festival , Cinema Festival, Petition, Icort Branch
× RELATED சித்திரை திருவிழா பாதுகாப்பு:...