×

மே 31-ம் தேதி IAS, IPS, IFS, IRS உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்: யுபிஎஸ்சி அறிவிப்பு

டெல்லி: ஒத்திவைக்கப்பட்ட யுபிஎஸ்சி தேர்வுகள் ஜுன் மாதம் நடைபெறும் என்று அறிவிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே.3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மே.3-ம் தேதிக்கு முன்பு நடைபெற இருக்கும் யுபிஎஸ்சி தேர்வுகள் அனைத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது இரண்டாவது முறையாக மே.3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் நாடு முழுவதும் இருக்கக்கூடிய கல்வி நிறுவனங்கள் அதன் விடுமுறையை மே.3-ம் தேதி வரை நீட்டித்து அறிவிவிப்பை வெளியிட்டிருந்தன. இதனை தொடர்ந்து மத்திய பணியாளர் தேர்வு வாரியமான யுபிஎஸ்சி தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில்; மே.3-ம் தேதிக்கு முன்பாக திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் அனைத்தும் ஜுன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதே சமயம் ஏற்கனவே மே.31-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த IAS, IPS, IFS, IRS உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணியாளர்களுக்கான திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், மாணவர்கள் தொடர்ந்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் யுபிஎஸ்சி தரப்பில் இருந்து அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. மே.3-ம் தேதிக்கு பிறகு நடைபெறும் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் யுபிஎஸ்சியில் பணியாற்றும் ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம்,  பிரதமரின் நிதிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : phase ,announcement ,IAS ,IRS ,IPS ,IFS ,UPSC ,UPSC Announcement , Civil Service Work Primary Examination, UPSC
× RELATED 2ம் கட்ட தேர்தல் 89 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம்