×

75 வீடுகளுக்கு வாடகையை ரத்து செய்த மனித நேயம் கொண்ட வீட்டு உரிமையாளர்!!

ஹைதராபாத் : ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் தனக்குச் சொந்தமான குடியிருப்புகளில் வசித்துவரும் 75 குடும்பத்தினருக்கும் ஏப்ரல் மாதத்திற்கான வாடகையை ரத்து செய்துள்ளார்.  கொரோனா வைரஸின் தாக்கம்  இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 377 பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போது இந்தியாவில் 2-வது கட்டத்தில் இருக்கும் கொரோனா வைரஸின் தாக்கத்தை 3-வது நிலையான சமூக பரவலை எட்டாமல் இருக்க, மத்திய, மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இதற்காக, நாடு முழுவதும் 2ம் கட்டமாக 19 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதனிடையே ஊரடங்கு தடை காலம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் போது, வாடகை வீட்டில் இருப்பவர்களிடம் வீட்டின் உரிமையாளர்கள் வாடகையை வசூலிக்க வேண்டாம் என்றும், வீட்டை காலி செய்ய வற்புறுத்தவும் கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. அதன்படி ஹைதராபாத்தைச் சேர்ந்த 41 வயதான  கொடூரி பாலலிங்கம் தனது மூன்று குடியிருப்புகளில் வசிக்கும் 75 குடும்பங்களுக்கு வாடகையை ரத்து செய்திருக்கிறார்.அதாவது பாலநகரில் உள்ள பாலலிங்கத்துக்குச் சொந்தமான குடியிருப்புகளில் வசிக்கும் 75 குடும்பத்தினரும் ஏப்ரல் மாதம் வாடகை கொடுத்த தேவையில்லை.

பாலலிங்கத்தின் குடியிருப்புகளில் உள்ளவை பெரும்பாலும் ஒரு படுக்கையறை கொண்டவை. அதில் பெரும்பாலும் பீகாரிலிருந்து பிழைப்புக்காக வந்தவர்கள்தான் வசிக்கிறார்கள். இப்போதே தனக்குக் கிடைக்கவேண்டிய 3.4 லட்சம் ரூபாய் வாடகையை ரத்து செய்துவிட்ட பாலலிங்கம், ஊரடங்கை நீடித்ததால் அடுத்த மாத வாடகையையும் ரத்து செய்ய எண்ணியிருப்பதாகச் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, ஆந்திராவிலும் தெலுங்கானாவில் உள்ள 250 ஏழைக் குடும்பங்களுக்கு 2.5 லட்சம் ரூபாயைப் பகிர்ந்து அளித்துள்ளார்.

Tags : homeowner ,homes , Homes, Rent, Cancellation, Humanities, Homeowner, Hyderabad
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...