×

சேலத்தில் காவல்துறை ஏற்பாட்டில் ஜோக்கர் வேடமணிந்து கொரோனா விழிப்புணர்வு

சேலம்: சேலத்தில் காவல்துறை ஏற்பாட்டில் ஜோக்கர் வேடமணிந்தவர், வாகன ஓட்டிகளிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.சேலம் மாநகர காவல்துறை சார்பில், சாலைகளில் ஓவியம் வரைந்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று, அஸ்தம்பட்டி போலீசாரின் ஏற்பாட்டில், ராஜேந்திரன் என்பவர் ஜோக்கர் வேடமணிந்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார், அவ்வழியே வந்த வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தினர்.

அப்போது, கொரோனா வைரஸ் கிருமி போன்று தலையிலும், கையிலும் பலூன் மாட்டியிருந்த ஜோக்கர் வந்து, விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு என வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தினார். ஊரடங்கு உத்தரவை மீறினால், கொரோனா தொற்றிக் கொள்ளும். அதனால், அத்தியாவசிய பொருட்களை அரசு அறிவித்த நேரத்தில் மட்டுமே வெளியே வந்து வாங்க வேண்டும். அப்போது கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என போலீசார் எடுத்துரைத்தனர். மாஸ்க் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு ஜோக்கர் வேடமணிந்தவர், மாஸ்க் வழங்கினார். இந்த விழிப்புணர்வு வாகன ஓட்டிகளை கவரும் வகையில் அமைந்திருந்தது.



Tags : Corona ,Salem ,Joker , Corona ,joker,police, arrangement ,Salem
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...