×

சாலையோர வியாபாரிகளுக்கு கொரோனா நிவாரண தொகை: ஆவடி மாநகராட்சி அறிவிப்பு

ஆவடி: கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக அரசு பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கி வருகிறது. மேலும், சாலையோர வியாபாரிகளுக்கு தலா ₹1000 நிவாரண உதவி வழங்க உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, ஆவடி மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளை கண்டறிந்து 104 பேருக்கு வங்கி கணக்கில் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள சாலையோர வியாபாரிகள் விபரம், தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள இயலாத நிலை உள்ளது.

இந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற உடனே மாநகராட்சியில் பதிவு பெற்ற அடையாள அட்டை உள்ள சாலையோர வியாபாரிகள் தங்களது அடையாள அட்டை மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு எண்ணை கொண்டு மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:- 9500690312, 9585299299, 18004255109. பின்னர், தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை மாநகராட்சி நிர்வாகம் மூலம் உடனடியாக தங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் ரவிசந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags : Roadside Dealers ,Announcement ,Awadhi Corporation , Corona Relief Amount, Roadside Dealers, Announcement , Awadhi Corporation
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...