×

கொரோனாவிலிருந்து மக்கள் விடுபட நாகையில் மகா மிருத்யுஞ்சை ஹோமம்

நாகை: உலக மக்கள் கொரோனா நோயில் இருந்து விடுபட நாகையில் மகா மிருத்யுஞ்ச ஹோமம் நேற்று நடந்தது.கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்கள் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் நோயில் இருந்து உலக மக்கள் விடுபட வேண்டி நாகையில் மகா மிருத்யுஞ்ச ஹோமம் நடந்தது. இதை தொடர்ந்து உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டி தன்வந்திரி ஹோமம் நடந்தது.

இதில் 54 வகையான ஹோமதிரவியங்கள் அடங்கிய பொருட்கள் கொண்டு ஹோமம் நடத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது. அதே போல் நாகை மகாலட்சுமி நகர் சாய்பாபா கோயிலில் உலக மக்கள் நலமுடன் வாழ சிறப்பு யாகம் நடந்தது.

Tags : Great Myrtunjian Homemade ,Naga ,Corona ,Free People , Great Myrtunjian ,Homemade , Naga, Corona
× RELATED நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை