×

ரூ.4 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்

புழல்: புழல் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் ₹4 லட்சம் மதிப்புள்ள குட்கா வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது. புழல் அடுத்த கதிர்வேடு செம்பியம் -  செங்குன்றம் சாலையில் புழல் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கதிர்வேடு பகுதியில் இருந்து வந்த மினி வேனை மடக்கி, டிரைவரிடம் விசாரித்தனர். அவர், முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் மினி வேனில் சோதனை நடத்தினர். அப்போது, அதில் ₹4 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ், மாவா, பான்பராக் போன்ற போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வேன் டிரைவர் புழல் விநாயகபுரம்  லட்சுமி நகர் 3வது தெருவை சேர்ந்த சையத் வாஜித் (34) என்பவரிடம் நடத்திய விசாரணையில், ‘ராயபுரத்தை சேர்ந்த குமரேசன் என்பவரிடம் டிரைவராக பணியாற்றி வருவதாகவும், அவர்தான் மாதவரத்தில் உள்ள ஒரு தனியார் குடோனுக்கு சென்று, அங்கிருந்து 30 அட்டை பெட்டிகளை எடுத்துவர சொன்னார் என கூறி உள்ளார்.  இதையடுத்து வேனுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர். மேலும், வேன் டிரைவர் குமரேசன் என்பவரை தேடி வருகின்றனர்.


Tags : kutka , Rs 4 lakh worth, kutka ,seized
× RELATED ஓசூர் அருகே வாகன சோதனையில் ரூ.11கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்