×

அமெரிக்கா நாண நன்னயம் செய்த வியட்நாம்

ஹனோய்: குட்டி நாடான வியட்நாம், அமெரிக்காவிற்கு மாஸ்க் மற்றும் பாதுகாப்பு உடைகளை அனுப்பி உதவி உள்ளது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 23,649 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மாஸ்க், மருந்து, சோதனை கருவிகள் என்று பலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தியாவிடம் கெஞ்சி கூத்தாடியும், பின்னர் மிரட்டியும் தான் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை பெற்றது. இதேபோல், சீனாவிடம் இருந்து கருவிகளையும், மாஸ்க்குகளையும் ஏராளமாக ஆர்டர் செய்து பெற்று வருகிறது. உலகத்தின் பல நாடுகளிடமும் இதற்காக அமெரிக்கா ஆர்டர் கொடுத்துள்ளது.

இந்நிலையில், குட்டி நாடுகளில் ஒன்றான வியட்நாம், அமெரிக்கா படும் கஷ்டத்தை பார்த்து அதற்கு தானாக முன்வந்து உதவியுள்ளது. அதாவது, கடந்த 9ம் தேதி 5 லட்சம் மாஸ்குகளையும், பாதுகாப்பு  உடைகளையும் வியட்நாம் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும், வரும் சனிக்கிழமை 4.5  லட்சம் மாஸ்குகள் மற்றும் பாதுகாப்பு உடைகளை அனுப்புவதாக வியட்நாம் தெரிவித்துள்ளது. 1955ல் வியட்நாம் போரின்போது, அமெரிக்கா தீவிரமாக போரில் இறங்கியது. இதனால் அங்கு பலர் மடிந்தனர். ஆனால், இறுதி–்யில் அமெரிக்கா ஆதரித்த தெற்கு வியட்நாமை, சீனா, ரஷ்யா ஆதரவுடன் வடக்கு வியட்நாம் வீழ்த்தியது. அதையெல்லாம் மனதில் கொள்ளாமல், அமெரிக்காவே வியந்து பாராட்டும்படி இப்போது வியட்நாம் அதற்கு உதவி உள்ளது

Tags : US ,Vietnam , USA, Vietnam, Coroana
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்