×

லாவோஸ், நைஜர், ஹோண்டூராசில் அதிகம்: ஏழை நாடுகளை விட இந்தியா படுமோசம்: ராகுல் காந்தி வேதனை

புதுடெல்லி: நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மக்களிடம் பெரிய அளவில் சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய தற்போது இந்தியாவில் மிகச்சிறிய அளவிலான மக்களுக்குத்தான் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது 10 லட்சம் பேருக்கு 149 பேரிடம் மட்டுமே சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது லாவோஸ், நைஜர் மற்றும் ேஹாண்டுராஸ் போன்ற நாடுகளில் மேற்கொண்டதை விட குறைவாகும். அங்கு முறையே, 10 லட்சம் பேருக்கு 157, 182 மற்றும் 162 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. அதை விட இந்தியாவில் மோசமான நிலை உள்ளது.

சோதனைக் கருவிகள் வாங்குவதில் இந்தியா தொடர்ந்து தாமதம் செய்து வந்ததால், தற்போது அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்போதுள்ள நிலையில், வைரசுக்கு எதிரான போராட்டத்துக்கு மக்களிடம் பெரிய அளவில் சோதனைகளை செய்வதுதான் ஒரே வழி. ஆனால், இதற்கான எந்த நடவடிக்கையும் நாம் மேற்கொண்டதாக தெரியவில்லை. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Tags : Laos ,Honduras ,Niger ,countries ,India ,Rahul Gandhi More Laos ,Rahul Gandhi , Laos, Niger, Honduras, India p, Rahul Gandhi
× RELATED லாவோசில் சிக்கி தவித்த 17 இந்தியர்கள்...