×

ஒரு நாளைக்கு 150 பேருக்கு மட்டுமே பொருட்கள் வழங்கி ரேஷன் கடைகளில் சமூகவிலகல் நடைமுறையை பின்பற்றுங்கள்: கூட்டுறவுத்துறை பதிவாளர் உத்தரவு

சென்னை,:  கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை: குடும்ப அட்டைதாரர் களுக்கு ஏப்ரல் மாதத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சிறப்பு பொதுவிநியோக திட்டப் பொருட்களை வரும் 16ம் தேதி முதல் நியாய விலை கடைகளுக்கு மே மாதத்துக்கான முன் நகர்வினை உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்களின் அனுமதியுடன் முன்னதாகவே தொடங்கி வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் 100 சதவீதம் முன் நகர்வினை முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நியாய விலை கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் ஒருவரோடு ஒருவர் நெருங்கி நிற்பதை தவிர்க்கும் விதமாக சமூக விலகல் எனும் நடைமுறையை தீவிரமாக பின்பற்ற வேண்டும்.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்கள் நியாய விலை கடைக்கு வந்து பொருள் பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறித்து வழங்கப்பட வேண்டிய டோக்கன் இளம்பச்சை நிறத்தில் முன்னதாக அச்சிட்டு வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 150 டோக்கன் வழங்கப்பட்டு, காலை 75 பேருக்கும், மாலை 75 பேருக்கும் பொருட்கள் வழங்கப்பட வேண்டும். டோக்கனில் நாள் மற்றும் நேரம் குறிப்பது குறித்து பின்னர் அறிவுரை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Registrar ,ration shops ,Co-operatives ,Cooperatives , orona, Ration Stores, Social Welfare, Registrar of Co-operatives
× RELATED பாரதியார் பல்கலையில் முன்னாள் மாணவர் சந்திப்பு