×

வெளிநாடுகளில் இருந்து வென்டிலேட்டர் தயாரிப்பதற்கான உபகரணங்கள் சென்னை வந்தன

சென்னை,: கொரோனா வைரஸ் நோய் தொற்று சிகிச்சைக்காக வென்டிலேட்டர்கள் தயாரிக்கும் உபகரணங்கள் வெளிநாடுகளிலிருந்து கார்கோ விமானத்தில் சென்னை வந்தன.இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகள் சிகிச்சைக்கு முக்கிய தேவையான சுவாச கருவியான வென்டிலேட்டர்கள் போதியஅளவு இல்லை. எனவே மத்திய அரசு நாட்டில் உள்ள பெரிய தொழிற்கூடங்களில் வென்டிலேட்டர்களை தயாரிக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் சென்னையை ஒட்டியுள்ள ஒரகடம், பெரும்புத்தூர், மறைமலைநகர் உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள பெரிய நிறுவனங்கள் வென்டிலேட்டர்களை தயாரிக்கும் பணிகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

 இதற்கு தேவையான உபகரணங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்பேரில் சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், மெக்சிகோ நாடுகளிலிருந்து வென்டிலேட்டர்கள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் 154 பார்சல்களில் சரக்கு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்தன. அதோடு அமெரிக்காவிலிருந்து கைகளில் அணியும் நவீன கிளவுஸ் மாடல்கள் ஒரு பார்சலும் வந்தது. சென்னை விமான நிலைய சுங்கத்துறை கொரியர் முனையத்தில் இவற்றை அதிகாரிகள் உடனடியாக க்ளியர் செய்து டெலிவரி கொடுத்து அனுப்பினர்.

Tags : Chennai , Overseas, Ventilator, Madras, Corona Virus
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?