×

சில்லி பாயின்ட்...

* இறுதி வரை களத்தில் நின்று ஆட்டத்தை வெற்றிகர மாக முடிப்பதில் டோனிக்கு ஈடு இணையில்லை. களத்தில் அவரது தன்னம்பிக்கை பிரமிப்பூட்டுவதாக இருக்கும். எப்போது நினைத்தாலும் தன்னால் பவுண்டரி அல்லது சிக்சர் அடிக்க முடியும் என்ற உறுதியுடன் விளையாடுவார். எதிரணி கேப்டனை தவறுசெய்யத் தூண்டுவதிலும் டோனி தனித்திறன் கொண்டவர் என்று ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி பாராட்டி உள்ளார்.
* கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா  ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் ரசிகர்கள் இல்லாமல் காலி ஸ்டேடியங்களில் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி எத்தகைய சூழ்நிலைக்கும் ஏற்ப தன்னை விரைவாகத் தயார்படுத்திக் கொள்ளக் கூடியவர். அவர் ஒரு சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன். இந்த சவாலையும் திறமையாகக் கையாள்வார் என்று ஆஸி. அணி ஸ்பின்னர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
* சர்வதேச அளவில் முன்னணி வீரர், வீராங்கனைகள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே ஆன்லைனில் பங்கேற்கும் துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி இன்று நடைபெறுகிறது. டெல்லியில் துப்பாக்கிசுடுதல் பயிற்சி அகடமி நடத்தி வரும் முன்னாள் வீரர் ஷிமோன் ஷரிப் இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
* ஆசிய அளவிலான அனைத்து கால்பந்து போட்டித் தொடர்களும் ஜூன் மாதம் வரை ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
* வில்வித்தை வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள், கருத்தரங்குகளை இந்திய வில்வித்தை கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
* இந்தியாவில் ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை பயிற்சி முகாம்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக இந்திய விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
* ஐபிஎல் போட்டியில் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிடும் அதிரடி ஆட்டங்களைப் போலவே ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ஒரு வீரர் வெளிப்படுத்தும் திறமைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் விக்கெட் கீப்பர் சந்திரகாந்த் பண்டிட் வலியுறுத்தி உள்ளார்.

Tags : Michael Hussey ,Australian , Dhoni, Australia's former player, Michael Hussey
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...