×

ஆசியான் நாடுகள் அவசர நிதி

ஹனோன்,:  கொரோனா பாதிப்பு குறித்த ஆசியான் நாடுகளின் மாநாடு வியட்நாம் தலைமையில் அதன் தலைநகர் ஹனோய் நகரில் நேற்று நடந்தது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஆசியான் நாடுகளில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர். அப்போது வியட்நாம் அதிபர் நிகுயென் சுவான் பூ பேசியதாவது:   கொரோனா வைரஸ் ஆசியான் மக்களின் சமூக, பொருளாதார நிலைத்தன்மை, சமூக பாதுகாப்பு ஆகியவற்றை சீரழித்து விட்டது. இதில் இருந்து ஆசியான் நாடுகள் தங்களை பாதுகாத்து கொள்ள அவரச நிதி உருவாக்க வேண்டும்.

எனவே, 10 உறுப்பினர் நாடுகள் கொண்ட குழு  அமைத்து தடுப்பு மருந்துகளை சேகரித்து வைக்கலாம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவும் வகையில் சுற்றுலா, ஏற்றுமதியை ஊக்குவிக்க எல்லைகளை திறந்து விட வியட்நாம் தயாராக உள்ளது என்றார்.

Tags : ASEAN Nations, Emergency Fund, Corona
× RELATED மே-03: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!