×

பண்ருட்டி எல்.என் புரம் பகுதியில் பட்டினியால் வாடும் ஆந்திர தொழிலாளர்கள்

பண்ருட்டி: பண்ருட்டி எல்.என்.புரம் பகுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 15க்கு மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 20 ஆண்டுகளாக சாலையோரத்தில் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர். இவர்கள் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் துடைப்பம் விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள் ஒரே இடத்தில் 20 ஆண்டுகளாக வசித்து வருவதால் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை ஆகியவை தமிழக அரசால் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2015ம் ஆண்டில் பெய்த கனமழையால் ரேஷன் கார்டு வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு விடடது. அதன்பிறகு அரசின் சலுகைகளை இவர்கள் பெறமுடியவில்லை.

 இதுபற்றி அவர்கள் கூறும்போது, நாங்கள் குடும்பத்தோடு ஊர் ஊராக சென்று பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் துடைப்பம் ஆகிய பொருள்களை விற்று பிழைப்பு நடத்துகிறோம். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே இருக்கிறோம். இதனால் கடந்த 21 நாள்களாக  வருமானம் இல்லாமல் இருப்பதால் உணவு இல்லாமல் பட்டினியில் இருக்கிறோம். எங்களின் ரேஷன்கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு விட்டன. இதனால் அரசின்சலுகைகளை பெற முடியவில்லை.

தற்போது வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் உணவுக்கு வழியின்றி பசியால் வாடுகிறோம். மேலும் குழந்தைகளுக்கு பால் வாங்கக்கூட முடியாமல் தவிக்கிறோம். எனவே தமிழக அரசு  உடனடியாக எங்களுக்கு நிவாரண தொகை மற்றும் உணவு பொருட்கள், பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.



Tags : area ,AP ,Panruti LN Puram , Panruti, Andhra workers
× RELATED வாட்டி வதைக்கும்...