×

மேலூர், திருமங்கலம் பகுதி கிராமத்தில் வெளியூர் ஆட்கள் உள்ளே வர தடை: முட் செடிகளை வெட்டி போட்டு எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டது

மேலூர்: மேலூர் அருகே கொரோனா பயத்தால் தங்கள் கிராமத்திற்குள் வெளியூர் ஆட்கள் யாரும் உள்ளே வர வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மேலூர் நகர் மற்றும் புறநகர் என மொத்தம் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மேலூர் நகரில் அத்தியாவசிய பொருட்கள் கடை உட்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மேலூர் அருகே நாவினிப்பட்டி ஊராட்சியும் வைரஸ் பாதித்த பகுதியில் ஒன்றாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த ஊராட்சிக்குட்பட்ட கூத்தப்பன்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் நேற்று ஒன்றிணைந்து தங்கள் ஊருக்குள் நுழையும் எல்கையில் முட்செடிகளை வெட்டி போட்டு அடைத்தனர். இத்துடன் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக வெளியூர் ஆட்கள் ஊருக்குள் வர அனுமதி இல்லை என்றும் எச்சரிக்கை வாசகமும் எழுதப்பட்டுள்ளது.

திருமங்கலம்: திருமங்கலம்  அருகே மேலஉரப்பனூர் புதுகாலனியில் 80 வீடுகள் உள்ளன.  கொரோனா பரவுதலை தொடர்ந்து தங்களது காலனி பகுதிக்குள் வெளிநபர்கள் யாரும்  வரக்கூடாது என பொதுமக்கள் எச்சரிக்கை பலகை எழுதி வைத்துள்ளனர். இது  குறித்து காலனி மக்களிடம் கேட்டபோது, தங்களது பகுதிக்கு தினசரி ஏராளமான  வெளிநபர்கள் வந்துசெல்கின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால்  தங்களது கிராமத்தில் வெளிநபர்களை அனுமதிப்பதில்லை என முடிவு செய்து போர்டு  வைத்துள்ளோம் என்றனர்.



Tags : Melur ,village ,plants ,outsiders ,Thirumangalam ,Mud ,board ,Alarm , village ,Melur, Thirumangalam,,cut Alarm board ,placed
× RELATED தனுஷுக்கு எதிரான மனு தள்ளுபடி